×

வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி

ஓசூர், மார்ச் 5: ஓசூர் தளி சாலையில் வேளாங்கண்ணி பள்ளி அருகில், வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து எம்.கே.எண்டர்டெயின்மெண்ட் உரிமையாளர் கனகராஜ் கூறியதாவது: கடலுக்கு அடியில் வாழும் சுமார் 50 ரக வண்ண மீன்கள், குகை மீன் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சியில் கடலுக்கு அடியில் நடப்பது போன்ற பிரமிப்புடன், பிரமாண்டமாக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் மட்டுமே, இம்மாதிரி அரங்கங்கள் வைக்கப்பட்டிருக்கும். ஓசூரில் முதன்முறையாக அமைத்துள்ள இந்த குகை மீன் கண்காட்சியை, குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் வெகுவாக கண்டுகளித்து வருவது சிறப்பு அம்சமாகும்.

வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அரங்குகள், உண்டு மகிழ டெல்லி அப்பளம், ஜஸ்கிரீம், பாப்கார்ன், பானிபூரி கடைகள், பொழுதுபோக்க ராட்சத ராட்டினம், ஜெயண்ட் வீல், சுனாமி, பிரேக் டான்ஸ், டிராகன் கோஸ்டர், குழந்தைகள் நீரில் விளையாட வாட்டர் போட்டிங், பலூன் ரைடிங் உள்பட எண்ணற்ற விளையாட்டுகள், பயத்துடன் ரசிக்க பேய் வீடு, 3டி ஷோ போன்ற வியக்கதக்க உள்அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஓசூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்களும் பொருட்காட்சியை கண்டு ரசித்து வருகின்றனர்.      

Tags : Home Appliances Exhibition ,
× RELATED அதிரடி விலை குறைப்பில் வீட்டு உபயோக...