×

உசிலம்பட்டி அருகே 58 கிராம கால்வாய் திட்டப்பணிகள்: கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

உசிலம்பட்டி, மார்ச் 5: உசிலம்பட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள 58 கிராம கால்வாய் திட்டத்தின் கட்டுமான பணிகளை தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா நேற்று ஆய்வு செய்தார். உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம கால்வாய் திட்டத்தில் ஆண்டு தோறும் நிரந்தரமாக நீரை திறக்க அரசாணை பிறப்பிக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் பகுதியில் உள்ள 58 கிராம பாசன கால்வாயின் தொட்டிப்பாலத்தை நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது உடனிருந்த மதுரை மண்டல பொதுப்பணித்துறை அதிகாரிகள், உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாய் திட்டத்தின் கட்டமைப்பு, விவசாய பாசன பரப்பு, இதனை செயல்படுத்துவதால் ஏற்படும் பலன்கள் குறித்து விளக்கமளித்தனர். இந்த கால்வாயில் நிரந்தரமாக நீர் திறக்கப்பட்டால் விவசாயிகள் பெரிதும் பயனடைவர் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர். இதுதொடர்பாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா உறுதியளித்தார்.

Tags : Usilambatti ,Chief Secretary ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை