நாகப்பட்டினம்: காஸ் சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து மாநில முதன்மை செயலாளர் சுந்தரவடிவேலன் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: காஸ் சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு திடீரென உயர்த்திருப்பது ஏழை, எளிய, நடுத்தர மக்களை அதிக அளவில் பாதிக்கும். கடுமையான பொருளாதார நெருக்கடி இருக்கக்கூடிய சூழ்நிலையில் காஸ் விலை உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும். எனவே பிரதமர் தலையிட்டு ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலன் கருதி காஸ் விலையை குறைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
