×

ஆளுநர் விவகாரம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் நல்ல முடிவு எடுப்பார்: அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: ஆளுநர் விவகாரம் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று அளித்த பேட்டி: புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மருத்துவத்துறையில் தேவையான அனைத்து அடிப்படை திட்டங்களையும் நிறைவேற்றுவோம். குட்கா வழக்கில் உச்சநீதிமன்றம் தனது கடமையை செய்து கொண்டுள்ளது. வழக்கை அவர்கள் எடுத்து உள்ளனர். நோட்டீஸ் கொடுக்க வேண்டியது அவர்கள் கடமை. அதனை கொடுத்துள்ளனர்.

ஆளுநரோடு கருத்து மோதல் வேண்டாம் என்ற மனப்பான்மையோடு இருப்பதால் அமைதியான போக்கை முதல்வர் கடைப்பிடித்து வருகிறார். அதே வேளையில் மற்ற மாநிலங்களில் வரும் தீர்ப்பு தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாட்டுக்கும் பொருந்தும். ஆளுநர் விவகாரத்தில் குறிப்பிட்ட காலம் தான் பொறுக்க முடியும். கால அவகாசம் பார்த்துக் கொண்டுள்ளோம். விரைவில் அமைச்சரவை கூடுகிறது. அப்போது ஏதேனும் முடிவுகள் எடுக்க முடிந்தால் தமிழ்நாடு முதலமைச்சர் நல்ல முடிவை எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : CM ,Minister ,Raghupathi ,
× RELATED 40க்கு 40 என்ற சபதத்தை முதல்வர்...