×

திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா பக்தர்களுக்கு கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்த வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருப்புத்தூர், மார்ச் 4: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப்பெருமாள் கோயிலில் வரும் 7ம் தேதி தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி இங்கு வருகை தரும் பக்தர்களுக்கு சுகாதாரமான முறையில் கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி தெப்ப உற்சவ விழா சிறப்பாக நடைபெறும். இந்த தெப்ப உற்வத்திற்கு ஆயிரக்கணக்கானோர் வருவார்கள். இதில் முக்கிய நிகழ்வாக கோயில் தெப்பக்குளப் படிக்கட்டிலும், குளத்தைச் சுற்றிலும் பெண்கள் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். இதற்காக, ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சி மன்றத்தின் சார்பில், தெப்பம் நடைபெறும் இடத்தின் அருகில் சில இடங்களில் கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் வசதி செய்து தரப்படும்.

இந்தாண்டு தெப்பத்திருவிழா வரும் 7ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட  தற்காலிக கழிப்பறைகளையே கடந்தாண்டு வரை மீண்டும் மீண்டும் பயன்படுத்த ஊராட்சி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த கழிப்பறைகளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயன்படுத்தியதை மாற்றம் செய்யாமல், அதே கழிப்பறைகளை ஆண்டுதோறும் பயன்படுத்துவதால் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் தொற்று நோய்கள் பரவும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வசதியும் ஏற்படுத்தி கொடுப்பதில்லை.  இந்த ஆண்டு கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகளை ஊராட்சி நிர்வாகம் புதிதாக அமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tirukoshtiyur Theppath festival ,
× RELATED திருமயம் அருகே பரபரப்பு: காரில்...