×

சிங்காநல்லூரில் இருந்து மதுரைக்கு பேருந்து இல்லாமல் பயணிகள் காத்திருப்பு

கோவை, மார்ச் 4: கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து தேனி, மதுரை, கன்னியாகுமரி, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மதுரைக்கு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், நேற்று மாலை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேருந்து வரவில்லை.
இது தொடர்பாக பயணிகள் போக்குவரத்துறை ஊழியர்களிடம் கேள்வி கேட்டும் சரியான பதில் கிடைக்காததால் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், ஒரு மணி நேரத்திற்கு பிறகு மதுரை, தேனிக்கு செல்ல பேருந்துகள் வந்தன. இதில், பயணிகள் ஏறி சென்றனர். 

Tags : Singhanallur ,Madurai ,
× RELATED நகை பறிமுதல் விவகாரம் கோவை போலீசார் மீது வழக்கு பதிய வேண்டும்