×

(வேலூர்) ₹5.20 கோடி மதிப்பில் சாலை, மேம்பாலம் பணி திட்ட இயக்குனர் ஆய்வு சைனகொண்டா கூட்ரோடு- மோர்தானா கிராமம் வரை

குடியாத்தம், மார்ச் 3: சைனகொண்டா கூட்ரோடு- மோர்தானா கிராமம் வரை ₹5.20 கோடி மதிப்பீட்டிற்கான சாலை பணி மற்றும் மேம்பாலம் பணிகளை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி நேற்று ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சைனகொண்டா கூட்ரோட்டில் இருந்து மோர்தானா கிராமம் வரை செல்லும் சாலையை பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹5 கோடியே 20 லட்சத்தில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டு, தற்போது பணிகள் நடந்து வருகிறது. இப்பணி 8 கிலோ மீட்டர் சாலைப்பணிகள் மந்தகதியில் நடப்பதாக கூறப்படுகிறது.

எனவே இப்பணிகளை விரைந்து முடிக்கக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் இப்பணிகளை வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி நேற்று ஆய்வு செய்தார். அப்போது மோர்தானாவில் இருந்து போடி அப்பனூர் கிராமம் செல்லும் சாலையில் அமைக்கப்படும் மேம்பால பணிகளை பார்வையிட்டார். இவற்றை விரைந்து முடிக்கவேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், திருமலை, பொறியாளர் குகன் உள்ளிட்டார் கலந்துகொண்டனர்.

Tags : Vellore ,Sainakonda ,Koodrod ,Mordhana ,
× RELATED ₹2.15 கோடியில் புத்துயிர் பெறும் வேலூர்...