×

ஸ்மார்ட் வகுப்புகள் துவங்கப்பட்ட அரசு பள்ளிகளில் வெப் கேமரா, யுபிஎஸ் வசதி

பணகுடி,மார்ச் 3:  ஸ்மார்ட் வகுப்புகள் துவங்கப்பட்ட அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வெப் கேமரா, யுபிஎஸ் வசதி செய்து தரப்படுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட சபாநாயகர் அப்பாவு தனது தொகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 225 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு துவங்கப்பட்டுள்ளது.  இதன் தொடர்ச்சியாக பணகுடி பேரூராட்சியில் சிவகாமியாபுரம், தண்டையார்குளம், புஷ்பவனம், அச்சம்பாடு ஊராட்சியில் மடப்புரம், கிழவனேரி, அச்சம்பாடு, புதுக்குடியிருப்பு, புதூர், பண்டாரகுளம் உட்பட 9 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்புகளை நேற்று துவக்கிவைத்தார்.

பின்னர் சபாநாயகர் அப்பாவு பேசுகையில் ‘‘மடப்புரம் பகுதிக்கு புதிதாக ரேஷன்கடை அமைத்து உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வருவேன். புதுக்குடியிருப்புக்கு புதிய பேருந்து வசதி, அச்சம்பாடு புதூர் ரூ.7 லட்சத்தில் நிழற்குடை, தண்டையார் குளத்தில் தாமிரபரணி குடிநீர் வழங்கும் குழாய்களில் உள்ள கசிவை உடனடியாக சரி செய்து தரப்படும். ரூ.1000 பெண்களுக்கு விரைவில் வழங்கப்படும். தற்போது பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஸ்மார்ட் வகுப்புக்காக வெப் கேமரா, மின் தடை ஏற்பட்டால் சமாளிக்க யுபிஎஸ் பேட்டரி ஆகியவை விரைவில் அனைத்து பள்ளிகளுக்கு வழங்கப்படும். மக்களின் குறைகளை பூர்த்தி செய்யவே நான் இருக்கிறேன். உங்களுக்கான தேவைகளை மனு எழுதி வாருங்கள் நிறைவேற்றி தரப்படும்’’ என்றார்.

 நிகழ்ச்சிகளில் மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர்கள் கோசிஜின், பிலிப்ஸ், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, துணைத்தலைவர் புஷ்பராஜ், திமுக நகரச் செயலாளர் தமிழ்வாணன், அச்சம்பாடு பஞ். தலைவர்கள் வெண்ணிலா, அசன், மகாராஜன், துணைத்தலைவர் ஜாக்குலின் ரீகன், வள்ளியூர் பஞ். தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், கவுன்சிலர்கள் கார்த்திக், அன்பரசு, ஆப்ரகாம் முத்துக்குமார், செந்தில்ராஜ், கோபி.கோபாலக்கண்ணன், ஜெயராம், பூங்கோதை, சொரிமுத்து, பானு, வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கோமதி, பணகுடி பேரூராட்சி நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன், திமுக மாவட்டப் பிரதிநிதி மாணிக்கம், அசோக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : UPS ,
× RELATED விழுப்புரம் மக்களவை தொகுதி வாக்கு...