சிவகங்கை: சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் துரையரசன் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்ட 75ம் ஆண்டை முன்னிட்டு பவள விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கு பெறும் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் மார்ச் 10 அன்று மன்னர் துரைச்சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு கல்லூரியில் இருந்து இரண்டு பேர் மட்டும் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயமும், முதல் இடத்தை பெறும் மாணவ, மாணவிகளுக்கு விருதும் வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
