மதுரை: பொதுமக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாகப் பெற்று உடனடி தீர்வு காணும் வகையில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும். வருகின்ற 6ம் தேதி நடைபெற வேண்டிய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நிர்வாக காரணங்களுக்காக வரும் 7ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் என கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
