பழநி: பாஜக நிர்வாகியை கண்டித்து பழநியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வயதான முதியவர் ரயிலில் பிரதமர் மோடியின் நிர்வாகம் குறித்து விமர்சனம் செய்தற்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி நாராயணனை கண்டித்தும், இதனை தட்டிக்கேட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் சாமுவேல் ராஜை காவல் துறையை பயன்படுத்தி அவமான படுத்தியதை கண்டித்தும் பழநியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட துணைத் தலைவர் அருள்செல்வன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், மாவட்ட பொருளாளர் வனஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் துரைச்சாமி, சிஐடியு நிர்வாகிகள் ஈஸ்வரன், பெரியசாமி, மாதர் சங்க செயலாளர் கௌரி, வாலிபர் சங்க செயலாளர் சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
