×

அரசு மருத்துவர் ஆலோசனை தண்டலைச்சேரி அரசு கல்லூரியில் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரி அரசு கலைக்கல்லூரியில் 52 வது தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு காரைக்கால் காவேரி படுகை ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மலர்மதி தலைமை வகித்தார். ஓஎன்ஜிசி நிறுவன மருத்துவர் இவரசன் முதலுதவி குறித்து விளக்கமளித்தார். அப்போது விபத்து, பேரிடர் காலங்களில் ஏற்படும் மயக்கம், சுயநினைவை இழத்தல் போன்ற நேரங்களில் எப்படி முதலுதவி செய்தல், இதயம் செயலிழத்தல் நேரங்களில் மூச்சு கொண்டு வருதல், எலும்பு முறிவு, ரத்த கசிவு, கண் பாதிப்பு, தீக்காயங்கள், விஷவாயு தாக்குதல், மின் தாக்குதல், பாம்பு, விஷ பூச்சிகள் கடித்தல் இவற்றிலிருந்து எப்படி தப்பிப்பது, மற்றவர்களை பாதுகாத்தல் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.தீயணைப்பு அலுவலர் காயத்ரி தீ பரவும் விதம், அதற்கான காரணங்கள், சிறிய அளவிலான தீ விபத்துகளை தவிர்த்தாலே பெரிய விபத்துகளை தவிக்கலாம், வீட்டில் பயன்படுத்தும் எரிவாயு, பெட்ரோல் பங்க், தொழில்சாலைகள், காட்டு தீ, ரசாயனங்கள், பெயிண்ட், பிளாஸ்டிக் மூலமும் தீ விபத்து ஏற்படலாம்.இவைகளிலிருந்து எப்படி பாதுகாப்பது, பாதித்த பிறகு எப்படி உயிர்காப்பது என்பது குறித்து விளக்கமளித்தார். பிறகு தீ பாதுகாப்பு குறித்து பல்வேறு உபகரணங்கள், நவீன முறைகள், குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் பாதுகாப்பு சுற்றுசூழல் பிரிவு துணை பொதுமேலாளர் தியாகராஜன், தீயணைப்பு துணை பொது மேலாளர் ரமேஷ் காகிரோ, பொறியாளர் கிரிஷ் மிஷ்ரா, பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார், என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர்கள் பன்னீர்செல்வம், நந்தினி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு ஓஎன்ஜிசி சமூக பொறுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் ஏற்பாடு செய்தார்.


Tags : Govt Doctor Counseling Thandaliccherry Government College ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் ட்ரோன் பறக்க தடை: மாவட்ட எஸ்பி தகவல்