×

பள்ளிகொண்டா அருேக வல்லண்டராமத்தில் பொற்கொடியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நிறைவு விழா: இன்று சிறப்பு யாக பூைஜகள்

பள்ளிகொண்டா, மார்ச் 2: பொற்கொடியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நிறைவு விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகளும், யாக சாலை பூஜைகளும் நடக்கிறது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வல்லண்டராமம் கிராமத்தில் பொற்கொடியம்மன் ஊர்க்கோயில் மற்றும் அருகே உள்ள வேலங்காடு ஏரியின் நடுப்பகுதியில் பொற்கொடியம்மன் ஏரிக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் ஏரித்திருவிழாவில் வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள். அதற்காக மாவட்டத்தின் சார்பில் அரசு உள்ளூர் விடுமுறை விடப்படும். இந்நிலையில், இந்த பொற்கொடியம்மன் ஏரிக்கோயிலில் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து நிறைவு விழாவின் போது அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்.

அதுபோல் நேற்று கும்பாபிஷேக நிறைவு விழாவினையொட்டி காலை 6 மணிக்கு ஏரிக்கோயிலில் உள்ள பொற்கொடியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து காலை 8 மணிக்கு யாகசாலையில் அமைக்கப்பட்டிருந்த வேள்வி தீயில் ஊர் பொதுமக்கள் நன்மைக்காக யாகம் வளர்க்கப்பட்டது. மேலும், காலை 10 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பொற்கொடியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த கும்பாபிஷேக நிறைவு விழாவில் வல்லண்டராமம், அன்னாசிபாளையம், பனங்காடு, வேலங்காடு கிராம மேட்டுகுடி, நாட்டாண்மைதாரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாட்டினை கோயில் செயல் அலுவலர் அண்ணாமலை, எழுத்தர் ஆறுமுகம், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் நான்கு ஊர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும், வல்லண்டராமம் பொற்கொடியம்மன் ஊர்க்கோயில் 6ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவினை முன்னிட்டு இன்று(2.3.2023) அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், யாகசாலை பூஜைகளும் நடைபெற உள்ளதாக கோயில் செயல் அலுவலர் அண்ணாமலை தெரிவித்தார்.

Tags : Porkodiyamman Temple Kumbabhishekam Consecration Ceremony ,Pallikonda Aruega Vallandaram ,
× RELATED பழைய நாணயங்களுக்கு பல லட்சம் தருவதாக...