×

திருத்துறைப்பூண்டியில் காஸ் விலை உயர்வு கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ., ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 2: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருத்துறைப்பூண்டி தெற்கு கமிட்டியின் சார்பில் உயர்த்தப்பட்ட கேஸ் விலையை உடனே வாபஸ் பெற வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கட்டிமேடு கடை தெருவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ரவி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ், மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜேஸ்வரி ரங்கசாமி, மதியழகன், செந்தில்குமார், கிளை செயலாளர்கள் வேதையன், நல்லதம்பி மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று பாமணி, பள்ளங்கோயில் பகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Tags : Marxist Commune ,Tiruthurapundi ,
× RELATED நாடாளுமன்றத் தேர்தலுக்கான...