×

வரலாற்று ஆய்வு மையம் கருத்தரங்கம்

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் நடைபெற்ற முதுகலை மற்றும் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கடந்த கால மற்றும் நிகழ்கால வரலாற்று பழம்பெரும் நிகழ்வுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தொடக்க நிகழ்வில் வரலாற்றுத் துறை உதவிப்பேராசிரியர். ஜெகந்நாத் வரவேற்புரை ஆற்றினார்,துணைத் தலைவர். ரமேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர். வெங்கடேஸ்வரன் தலைமை உரையாற்றினார். கருத்தரங்கின் உத்தரப்பிரதேசம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக பேராசிரியர் சாந்தினிபீ சிறப்புரை ஆற்றினார்.

சென்னை பச்சையப்பா கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் சரவணன் தென்னிந்திய வரலாற்றில் உண்மைகளும் புனைவுகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார். நிறைவாக வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் எபிஜேம்ஸ் நன்றியுரை கூறினார். இக்கருத்தரங்கில் விருதுநகர் வன்னிய பெருமாள் பெண்கள் கல்லூரி, சாத்தூர் ராமசாமி நாயுடு கல்லூரி, சிவகாசி அரசு கலைக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன்பெற்றனர். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை வரலாற்று துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.




Tags : Historical Studies Center ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை