×

தேனி அருகே கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம் கலெக்டர் துவக்கி வைத்தார்

தேனி: தேனி அருகே குன்னூரில் கால்நடைகளுக்கான வாய்காணை நோய் தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாமை கலெக்டர் ஷஜீவனா தொடக்கி வைத்தார். கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், தேனி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான வாய்காணை நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. தேனி அருகே குன்னூரில் நேற்று இம்முகாமினை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார். அப்போது, முகாமிற்கு கொண்டு வரப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கை குறித்தும், கால்நடைகளுக்கு அளிக்கப்படும் தடுப்பூசி பணி தொடர்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ள விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் மடிப்பேடுகள் குறித்தும் ஆய்வு கால்நடைத் துறை அதிகாரிகளிடம் கேட்டார்.

இதுகுறித்து கலெக்டர் ஷஜீவனா கூறும்போது, தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் 3 வது சுற்றின்படி, கால்நடைகளுக்கான வாய்க்காணை நோய் தடுப்பூசி பணிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மார்ச் 1ம் தேதி தொடங்கி வருகிற 28ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் பசுவினம் மற்றும் எருமையின கால்நடைகளுக்கு ஏற்படும்ட கால் மற்றும் வாய்க்காணை நோய்க்கான தடுப்பூசி 1 லட்சத்து 3 ஆயிரம் கால் நடைகளுக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் சுப்பையா பாண்டியன், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Theni ,
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு