×

விழிப்புணர்வு பேரணி நடந்தது கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை மூலம் கபசுர குடிநீர் வினியோகம்

கந்தர்வகோட்டை, மார்ச் 2: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் வெளிநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுக் செல்கின்றனர். சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கும், காவல் நிலையத்திற்கும் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராதிகா, சித்தா மருத்துவர் வேம்பு ஆகியோரின் உத்தரவின்படி சித்த மருந்துவபிரிவைச் சார்ந்த பணியாளர்கள் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் நேரில் சென்று கபசுர குடிநீர் வழங்கி வருகின்றனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, கபசுர குடிநீர் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது, தினசரி பருகி வந்தால் உடல் உபாதைகள் குறையும், நாள் முழுவதும் புத்துணர்வோடு இருக்கலாம் என்று தெரிவித்தனர். மேலும் மருத்துவமனை வளாகத்தில் தினமும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Kapasura ,Gandharvakot Government Hospital ,
× RELATED கபசுர குடிநீர் வழங்கல்