×

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கோலாகலம்

நலத்திட்ட உதவிகள் வழங்கிய திமுகவினர் திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை திமுகவினர் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடினர். தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நேற்று மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் பட்டாசு வெடித்தும் கொடியேற்றியும் நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கியும் முதல்வரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.
இதன்படி திண்டுக்கல் ஒன்றியம் அனுமந்தநகரில் கிளை கழகம் சார்பாக கட்சிக்கொடியேற்றி ஏற்றி இனிப்புகள் மற்றும் முதியவர்களுக்கு வாக்கிங் ஸ்டிக் மற்றும் ஆதரவற்ற பெண்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு இலவச உடைகள் வழங்கப்பட்டது.

இதில் ஒன்றிய பொருளாளர் பழனிசசாமி, கிளைச்செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர் பாலமுருகன், கிளை கழக நிர்வாகிகள் பிரசாத் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் ஒன்றிய இளைஞரணி சார்பில் உழவர் சந்தை மற்றும் சீலப்பாடி பிரிவில் கழக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கதிரேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றிய பொருளாளர் பழனிசாமி, முன்னாள் ஊராட்சி செயலாளர் சுந்தர்ராஜன், மற்றும் கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் பூ மார்க்கெட் அருகே டாஸ்மார்க் தொ.மு.ச சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராஜேஷ் கண்ணா, மாவட்ட தலைவர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர் கருப்பையா, பொருளாளர் பால்ராஜ், பிரசார செயலாளர் மாட்டீர், அமைப்பு செயலாளர் ஜெகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


திண்டுக்கல் 42 வார்டு பகுதியில் மாமன்ற உறுப்பினர் தெரசா மேரி திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் மாநகராட்சியின் வீடற்ற ஏழை, எளியோர் தங்கும் மையத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் ஜான் பிரிட்டோ மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் 31 வது வார்டில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் விஜயகுமார். வார்டு செயலாளர் தலைமையில் கழக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பெற்றோர் - ஆசிரியர் சங்க தலைவர் சுபாஷினி தலைமையில் விராவிப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் விஜயகர், ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன் ஆகியோர் முன்னிலையில் மெர்சி பவுண்டேஷன் தலைவரும் சமூக ஆர்வலருமான மெர்சி செந்தில்குமார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.

விழாவில் திமுக நிர்வாகிகள் நரசிம்மன், வரதராஜன், சந்திரசேகர், ராஜாராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். நத்தத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார் தலைமையில் திமுகவினர் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினர். பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, வடக்கு ஒன்றியச் செயலாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி கொடியினை நகரச் செயலாளர் ராஜ்மோகன் ஏற்றினார். தொடர்ந்து இனிப்புகள் வழங்கினர். இதில் பேரூராட்சி துணைத் தலைவர் மகேஸ்வரி சரவணன், கவுன்சிலர்கள் இஸ்மாயில், ராமு, மாரிமுத்து, லதா, நகர துணைச் செயலாளர்கள் சின்னக்காளை, சகுபர் சாதிக், லத்திப், மாவட்ட பிரதிநிதிகள் அழகர்சாமி, அய்யனார், கிளைச் செயலாளர் கார்த்தி, மகாலிங்கம், நகர இளைஞர் அணி அமைப்பாளர் இப்ரில் ஆசித், சிறுபான்மை பிரிவு அப்துல் மஜீத், வார்டு செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


முன்னதாக வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமையில் செந்துறை, மணக்காட்டூர், குட்டுப்பட்டி போன்ற இடங்களில் திமுக கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர். நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த நான்கு குழந்தைகளுக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கரிகாலபாண்டியன் தலா இரண்டு கிராம் தங்க மோதிரம் அணிவித்து புத்தாடை, ஊட்டச்சத்து உணவு பெட்டகம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் 10க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு புத்தாடையும், கர்ப்பிணிகள் மற்றும் புறநோயாளிகளுக்கு பழங்கள் மற்றும் ஊட்டசத்துமிக்க உணவுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், புதுக்கோட்டை கிளைச் செயலாளர் முனிச்சாமி, கிளைச் செயலாளர் மணிமாறன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலரும் நகர பொறுப்பாளருமானி பால்கனகரத்தின ராஜ் உட்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஒட்டன்சத்திரத்தில் நகர செயலாளர் வெள்ளைச்சாமி தலைமையில் நடந்த விழாவில் காமராஜர் மார்க்கெட்டில் காலை உணவு, நகராட்சி பணியாளர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டது. முன்னதாக ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு கொடியேற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டது.  இந்நிகழ்வில் நகர் மன்ற தலைவர் திருமலைசாமி மாவட்ட அவைத்தலைவர் மோகன், செயற்குழு உறுப்பினர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் பாலு, அவைத்தலைவர் சோமசுந்தரம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், நகர துணைச் செயலாளர் கிருஸ்ணமூர்த்தி உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், இளைஞரணி, மாணவரணி, தகவல் தொழில்நுட்ப அணி, மகளிர் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதேபோல் ஒட்டன்சத்திரம் தெற்கு ஒன்றியம் விருப்பாட்சி, சத்திரப்பட்டி, சாமியார்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றிய செயலாளர் தர்மராஜன் தலைமையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அசோக் வேலுச்சாமி, ஒன்றிய பொருளாளர் குப்புச்சாமி, ஊராட்சி செயலர் பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், ஊராட்சிமன்ற தலைவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய பகுதிகளில் ஒன்றிய செயலாளர் தங்கராஜ் தலைமையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. கள்ளிமந்தையத்தில் ஒன்றிய துணைப்பெருந்தலைவர் தங்கம் தலைமையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்தராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் தண்டபாணி, முருகானந்தம், ஊராட்சி செயலர் கோதண்டராமன், ஊராட்சி தலைவர் கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வடக்கு ஒன்றிய பகுதிகளில் ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன் தலைமையில் இடையகோட்டை, கொ.கீரனூர், மார்க்கம்பட்டி, ஜோகிபட்டி, குத்திலிப்பை, ஐ.வாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கொண்டாடப்பட்டது. வடமதுரையில் நகரச் செயலாளர் கணேசன் தலைமையில் பஸ் நிலையப் பகுதியில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் வடமதுரை ஒன்றிய செயலாளர் சுப்பையன், பேரூர் திமுக நகர செயலாளர் மெடிக்கல் கணேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


வேடசந்தூரில் தமிழ்நாடு சாலை பணியாளர்கள் சங்கம் சார்பாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு சங்க மாவட்ட செயலாளர் வேல்முருகன், கிளை தலைவர் சீரங்கன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதா பார்த்திபன், ஒன்றிய பெருந்தலைவர் சவுடேஸ்வரி கோவிந்தன், பேரூர் கழகச் செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி தலைவர் மேகலா கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். வேடசந்தூர் தெற்கு ஒன்றியம் மற்றும் நகர திமுக சார்பாக நடந்த நிகழ்ச்சியில் அவை தலைவர் ஆரோன், நகர செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தனர். பஸ் நிலையம் அருகே கொடியேற்றி பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், மாவட்ட கவுன்சிலர் கவிதா முருகன், நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அய்யலூரில் பேரூர் கழகச் செயலாளர் கருப்பன் தலைமையில் வடமதுரை ஒன்றிய செயலாளர் சுப்பையன் முன்னிலையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


இவ்விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நோட்டுகள் வழங்கப்பட்டது. அய்யலூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தேபோல் எரியோட்டில் நகரச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் எரியோடு பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி கார்த்திகேயன் தலைமையிலும், வேடசந்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதா பார்த்திபன் முன்னிலையில் அன்னதானம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டுகள் வழங்கப்பட்டது.
சாணார்பட்டி அருகே கம்பளியம்பட்டியில் ஒன்றிய துணைச் செயலாளர் வீராசாமி தலைமையில் கழக கொடியேற்றியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் அமிர்தர்ஷினி ராஜா மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கோபால்பட்டியில் திமுக ஒன்றிய முன்னாள் கிளைச் செயலாளர் வெள்ளைச்சாமி தலைமையில், திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் திமுக ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வடமதுரையில் நகரச் செயலாளர் கணேசன் தலைமையில் சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று திண்டுக்கல் சீலப்பாடியில் துப்புரவு பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கிய மெர்சி செந்தில்குமார்.

Tags : Chief Minister ,M.K.Stal ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை