×

சிறைச்சாலையில் கண் சிகிச்சை முகாம்

புதுக்கோட்டை: சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை காவல்துறை தலைமை இயக்குநர் வழிகாட்டுதலின்படி, திருச்சி சரக சிறைத்துறை துணை தலைவரின் அறிவுறுத்தலின்பேரில் புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளி மற்றும் மாவட்ட சிறையின் சிறைக்கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் முன்னிலையில் புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளி மற்றும் மாவட்ட சிறையில் சிறைவாசிகளுக்கு கண் சிகிச்சை முகாம் நடந்தது. சிறப்பு மருத்துவர் மரு.சரவணன், உதவி மருத்துவர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இச்சிறையின் மருத்துவ அலுவலர்கள், மருத்துவ பணியாளர்களால் நடத்தப்பட்டது. இம்மருத்துவ முகாம் மூலமாக 100க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் மற்றும் சிறைப்பணியாளர்கள் பயன் பெற்றனர்.



Tags : Jail Eye Camp ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை