கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக கந்தர்வகோட்டையில் சாலை மறியல் போராட்டம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மோட்டார் வாகன சட்டத்தை திருத்தம் செய்ததை கைவிட வேண்டும். ஆன்லைன் அபராதம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ரூபாயை கொள்ளை அடிக்கும் கொடூரத்தை நிறுத்த வேண்டும். ஆர்டிஓ அலுவலகத்தில் மாமூல் வாங்குவதை தடுக்க வேண்டும். பெட்ரோல் -டீசல் சிலிண்டர் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்ன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
ஒன்றிய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் செய்தனர். இந்த மறியல் போராட்டத்திற்கு தொழில் சங்க உறுப்பினர் இளையராஜா, தலைமை போக்குவரத்து சங்க பொருளாளர் டேவிட் சுருளி ராஜன் முன்னிலை வகித்தார். மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் செந்தில் மாறன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் தஞ்சாவூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
