×

புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு கருத்தரங்கம்

கொள்ளிடம்: புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு கருத்தரங்கம் நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் அண்ணாமலை பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஒரு நாள் தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய கருத்தரங்கம் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சசிகுமார் தலைமை வகித்தார். கல்லூரி வணிகவியல் துறை தலைவரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் திருநாராயணசாமி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக அண்ணாமலை பல்கலைக்கழக வணிகவல் துறை பேராசிரியர் பத்மநாபன் கலந்து கொண்டு \”சந்தையிடுதலில் நுணுக்கங்கள்\” என்ற தலைப்பிலும், மயிலாடுதுறை மாவட்ட தொழில் மைய தலைமை மேலாளர் மணிவண்ணன் \”தொழில் சார்ந்த திட்டங்களும் மற்றும் மாதிரிகளும்\” என்ற தலைப்பிலும், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்
முத்துசாமி மற்றும் மாவட்ட நிதியியல் கல்வி ஆலோசகர் னிவாசன் ஆகியோர் \”நிதி உதவிகள்\” என்ற தலைப்பிலும், மாவட்ட ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக மாவட்ட மேலாளர் சுசீலா தாட்கோ திட்டத்தின் மூலம் இருக்கக்கூடிய அரசு சார்ந்த சலுகைகள்\” என்ற தலைப்பிலும் பேசினர். அண்ணாமலைப் பல்கலைக்கழக தொழில் மேம்பாட்டு கள ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் தனசேகரன் தொழில் தொடங்குவதின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் பேசினார். நிகழ்வில் துறை தலைவர்கள் சாந்தி, குமார், கார்த்திகா, கல்லூரி உடற்கல்வி இயக்குனர் பிரபாகரன், நூலகர் சுப்பிரமணியன், பிறத்துறை பேராசிரியர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Tags : Entrepreneurship Development ,Puttur ,MGR Government College of Arts ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை