×

காரைக்கால் ரயிலடி ஓரத்தில்

காரைக்கால்: காரைக்கால் ரயிலடி ஓரத்தில் பாதிக்கப்பட்ட 18 குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கியது.திருமுருகன் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு செய்தார். காரைக்கால் பேரளம் இடையேயான அகல ரயில் பாதை திட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே காரைக்காலில் உள்ள கோவில்பத்து பகுதியில் வாழ்ந்த 18 குடும்பங்கள் அகல ரயில் பாதை விரிவாக திட்டத்தில் பாதிக்கப்பட்டதால் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமுருகனிடம் பாதிக்கப்பட்டோர் மாற்று இடம் வழங்க கோரி கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து திருமுருகன் எம்எல்ஏ, மாவட்ட கலெக்டர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க கோரி கேட்டுக்கொண்டதன் பேரில் காரைக்கால் அடுத்த பிள்ளை தெருவாசல், ஷா கார்டன் நகர் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எல்ஜிஆர் பட்டா இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமுருகன் உத்தரவின் பேரில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு சுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. இப்பணிகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமுருகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


Tags : Karaikal Railway ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை