மதுரை: மதுரை கோட்ட ரயில்வேயில் மக்கள் தொடர்பு அலுவலராக (பிஆர்ஓ) பணியாற்றியவர் ராதா. இவருக்கு, பணி நிறைவு பாராட்டு விழா மதுரையில் நடந்தது. விழாவுக்கு ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் தலைமை வகித்தார். பட்டிமன்ற பேச்சாளர் ராஜா சிறப்புரையாற்றினார். விழாவில், முதுநிலை வணிக மேலாளர் ரதிபிரியா, துணை தலைமை பொறியாளர் ரதி, இயக்க மேலாளர் சபரீஷ்குமார், பாதுகாப்பு அலுவலர் மைதீன் பிச்சை, டிஆர்இயூ கோட்ட இணை செயலாளர் சங்கரநாராயணன், எஸ்ஆர்எம்யூ உதவி கோட்ட செயலாளர் ராம்குமார், ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் மனோகரன், ரமேஷ் பங்கேற்றனர்.
