×

நத்தத்திற்கு கஞ்சா கடத்திய வழக்கில் தலைமறைவான சகோதரர்கள் ஒரு ஆண்டுக்கு பின் கைது

நத்தம்:நத்தத்துக்கு ஆந்திராவிலிருந்து கடந்த 2022 பிப்.19ல் 140 கிலோ கஞ்சா கடத்தியதாக சாணார்பட்டி அருகே அஞ்சுகுழிபட்டியை சேர்ந்த கணேசன், அழகு, குணசேகரன், அம்சுபாண்டி, சரவணன் ஆகியோரை நத்தம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள அஞ்சுகுழிபட்டியை சேர்ந்த சகோதரர்கள் அருண்பாண்டி, முத்துப்பாண்டி ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் படுகை காட்டூர் அருகே மலையடிவாரத்தில் 2 பேரும் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, எஸ்ஐ பாண்டியராஜன், காவலர்கள் மோகன் கனகவிஜயகுமார், வேல்முருகன், காமராஜ் தலைமையிலான தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று இருவரையும் கைது செய்தனர். பின்னர் ேபாலீசார், மதுரை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற அமர்வு நீதிபதி முன்னிலையில் இருவரையும் ஆஜ்ர்படுத்தி திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Tags : Nattham ,
× RELATED நத்தத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி