×

ராஜபாளையம் பகுதிகளில் உள்ள பனை மரங்களை காப்பாற்ற வேண்டும்: அரசுக்கு தொழிலாளர்கள் கோரிக்கை

ராஜபாளையம், பிப். 28: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனை மரங்கள் அதிகளவில் காணப்படுகிறது. இப்பகுதியை சேர்ந்த பலர் பல ஆண்டுகளாக பனைத் தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். தற்போது பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த பனை மரங்கள் அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்களிலும், கண்மாய், நீர்நிலைகளில் உள்ள கரைகளில் பனை மரங்களை வளர்த்து கரைகளை பலப்படுத்த உதவியாக இருந்து வருகிறது. ஆகவே பனை மரங்களில் இருந்து கிடைக்கக்கூடிய பதநீர், நுங்கு, கருப்பட்டி, பனங்கிழங்கு, அதன் ஓலையில் இருந்து கைவினைப் பொருட்களாக செய்யக்கூடிய கூடை அனைத்தும் இயற்கையை சார்ந்து கிடைக்கக்கூடிய அனைத்தும் மருத்துவம் குணம் கொண்டதாக உள்ளது.

மேலும் அதன் பயன்பாட்டை குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்து பனை மரங்களில் இருந்து உற்பத்தியாகும் பொருட்களை சந்தைப்படுத்தவ அரசு ஊக்கப்படுத்த வேண்டும். பனை தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்களை காப்பாற்ற அரசு வழி வகுக்க வேண்டும் என பனைத்தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Rajapalayam ,
× RELATED ராஜபாளையம் பகுதியில் தென்னை மரங்களில் நோய் தாக்குதல்