பரமக்குடி, பிப்.28: பரமக்குடி அரசு கலை கல்லூரியில் நான் முதல்வர் திட்டத்தின் சார்பாக உயர்கல்வியில் பதிவு விகிதத்தை அதிகரிக்க பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி தரத்தை விளக்கும் விதமாக கல்லூரி களப்பணி நடைபெற்றது. பரமக்குடி சுற்றியுள்ள காமன் கோட்டை, நயினார்கோவில், காடர்ந்தகுடி, சத்திரக்குடி, மஞ்சுர், பொட்டகவயல் ஆகிய ஊர்களை சேர்ந்த மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 70 பேர் பரமக்குடி அரசு கலை, கல்லூரிக்கு வருகை தந்தனர். இவர்களை பாரம்பரிய கலையான ஒயிலாட்டம் ஆடி மாணவர்கள் வரவேற்றனர். நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் (பொ) சிவக்குமார் தலைமையில், துறைத்தலைவர்கள் கணேசன், அறிவழகன், கண்ணன், ரேணுகாதேவி, மும்தாஜ் பேகம், மோகன கிருஷ்ணவேணி, தினேஷ்,ரமேஷ் பாபு, ராமமூர்த்தி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ,மாணவிகள் துறை வாரியாக சென்று பார்வையிட்டனர். அப்போது ,துறை ரீதியான பாடம் மற்றும் வேலை வாய்ப்பு குறித்து செயல் விளக்கம் மற்றும் காணொளி மூலம் தகவல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கல்லூரியின் கண்காணிப்பாளர் ரகுபதி உள்ளிட்ட பேராசிரியர்கள் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மாணவி ஜமுனா கூறுகையில், நான் முதல்வர் திட்டத்தின் மூலம் கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகள் வேலை வாய்ப்பு குறித்து தெளிவான விளக்கத்தினை கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் தெரிவித்தனர். பிளஸ் 2 முடித்தவுடன் எந்த பாடம் படிக்க வேண்டும் என்பது இப்போது தெரிந்து கொண்டோம். அரசு கலைக்கல்லூரி தனியார் கல்லூரிக்கு இணையாக பாடப்பிரிவுகள், கல்லூரியின் அடிப்படை மற்றும் கட்டமைப்மூமெபு வசதிகள் உள்ளன பேராசிரியர்கள் அன்பான அணுகுமுறை பிடித்துள்ளது இந்த களப்பணிக்கு ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு நன்றி எனக் கூறினார்.
