×

செண்டைவாத்யத்திற்கேற்ப தையம் நாட்டியம் ஆடிய கலைஞர்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தனர். நீலகிரியை கண்டறிந்த ஜான் சலீவனை நினைவு கூறும் விழா தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

ஊட்டி:   நீலகிரி மாவட்டத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டி நகரினை கண்டறிந்து கட்டமைத்த இங்கிலாந்தை சேர்ந்த ஜான் சலீவனை நினைவு கூறும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது, வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளுவது குறித்த அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் ஊட்டி தமிழ்நாடு ஆய்வு மாளிகையில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். நீலகிரி தொகுதி எம்.பி. ஆ. ராசா தலைமை வகித்தார். கூட்டத்தில் நிகழ்ச்சிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து நீலகிரி தொகுதி எம்.பி. ஆ. ராசா கூறியதாவது: 200 ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டி நகரினை கண்டறிந்து கட்டமைத்த இங்கிலாந்து நாட்டை சார்ந்த ஜான் சலீவனை நினைவு கூறும் வகையில் தமிழ்நாடு முதல்வர் கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி - 200 விழாவை துவக்கி வைத்து, இதனை கொண்டாடுவதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். அதன் தொடர்ச்சியாக பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நிறைவு விழாவினை முன்னிட்டு புத்தக கண்காட்சி, புகைப்பட கண்காட்சி, குறும்பட போட்டி, திரைப்பட விழா, பழங்குடியின மக்களின் கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எந்தெந்த வாரத்தில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து கலெக்டர், எஸ்பி உள்ளிட்ட பல்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வுகள் அனைத்தும் மே மாதம் வரை தொடர்ந்து நடைபெறும். இந்த 200-வது ஆண்டு நிறைவு விழாவினையொட்டி பல்வேறு துறைகளின் சார்பில் ஊட்டியில் பல்வேறு கட்டமைப்புகளை கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு முதல்வரிடம் கோரிக்கைகள் முன் வைத்துள்ளோம். மறைந்த ஜான் சலீவன் நினைவினை போற்றும் வகையில் நமது மாவட்டத்தில் பெரிய அளவிலான விழா நடத்தப்பட உள்ளது. இதில் தமிழ்நாடு முதல்வரர் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் மாவட்ட எஸ்பி பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, நகராட்சி துணை தலைவர் ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Taiyam ,Sendaivadyam ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,John Sullivan ,
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...