பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் ஆனைக்கரை வெள்ளாளூர் பகவதி கோயில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு விசேஷ பூஜைகள் கோயில் மேல்சாந்தி தலைமையில் நடந்தன. விழாவில் அருளாளியினர் செண்டைவாத்ய மேளங்களுக்கேற்ப ஆடிப்பாடி பக்தர்களுக்கு அருள்வாக்கு அளித்தனர்.பக்தர்கள் நீண்ட கார்த்திகை தீபங்கள் ஏற்றி வழிப்பட்டனர். விழாவை முன்னிட்டு ஆனைக்கரை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் கோயிலுக்கு வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாவில் அலங்கரித்த யானைகள் மீது அம்மன் திருவீதியுலா நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு பகுதியை சேர்ந்த மக்களின் செண்டைவாத்யம், சிங்காரிமேளம், நையாண்டிமேளம், பாண்ட்வாத்யம், பஞ்சவாத்யம் என பல்வேறு விதமான வாத்யகளுடன், வேடங்கள் அணிந்த கலைஞர்களின் ஊர்வலம் நடந்தது.