காரைக்குடி, பிப். 27: ஓவியர்கள் நலவாரியத்தில் சிறப்பான திட்டங்களை அறிவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுக்குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிவகங்கை மாவட்ட ஓவியர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் காரைக்குடியில் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் அழகர்சாமி வரவேற்றார். மாவட்ட தலைவர் சேவுகன் தலைமை வகித்தார்.
மாவட்ட துணைத்தலைவர் கண்ணன், செயலாளர் மதி, பொருளாளர் புகழேந்தி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓவியர்கள் நலவாரியத்தில் சிறப்பான திட்டங்களை அறிவித்து ஓவியர்களின் வாழ்வில் ஒளியேற்றியதற்கு நன்றி கூறப்பட்டது. கோவிட் காலத்தில் தேசிய தலைவர் கிருஷ்ணா தெரிவித்ததின்படி சுவார் ஓவியங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஓவியர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட ஓவியர்கள் நலனுக்கு என திட்டங்களை செயல்படுத்துவது. சமத்துவபுரம் போன்று ஓவியர்களுக்கு என ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓவியர்கள் கிராமம் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
