குப்பையை தரம் பிரித்து வழங்கிய மக்களுக்கு பரிசு வழங்கிய பேரூராட்சி தலைவர்

கோபி,பிப்.27:  கோபி அருகே உள்ள நம்பியூர் பேரூராட்சி 8வது வார்டில் குப்பையை தரம் பிரித்து வழங்கிய பொதுமக்களுக்கு, பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் பரிசு வழங்கி பாராட்டினார். கோபி அருகே உள்ள நம்பியூர் பேரூராட்சியில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை தரம் பிரித்து வழங்க பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.பேரூராட்சி அறிவிப்பை தொடர்ந்து,  8வது வார்டு பகுதியில் வசித்து வரும் 3 பெண்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை தரம் பிரித்து வழங்கி வருகின்றனர்.

தொடர்ந்து இதே போன்று குப்பையை தரம் பிரித்து வழங்கிய 3 பெண்களுக்கும் நம்பியூர் பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் பாராட்டி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி 8வது வார்டு கவுன்சிலர் லட்சுமி சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேரூராட்சி தலைவரின் திடீர் பரிசால் அந்த பகுதியில் உள்ள அனைவரும் பரிசு பெற வேண்டும் என்பதற்காக குப்பையை தரம் பிரித்து வழங்க தொடங்கி உள்ளனர்.நம்பியூர் பேரூராட்சி தலைவரின் இந்த முயற்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories: