×

திருச்சி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் விழிப்புணர்வு

திருச்சி:திருச்சி அரசு அண்ணல் காந்தி மருத்துவமனையில் வி லவ் யு அறக்கட்டளை சார்பில் நேற்று கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, சென்னையிலும், ரத்ததானம் செய்வதன் அவசியத்தை வௌிப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 கோடி யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் ரத்த விநியோகத்தில் குறிப்பிடத்தக்க பற்றாக்குறை உள்ளது. ஆனால் ஒரு நாட்டின் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 1% அதன் தேவைகளைப் பூர்த்தி செய்ய இரத்த தானம் செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. இருப்பினும், இந்தியாவில், தகுதியான மக்கள் தொகையில் 1%-க்கும் குறைவானவர்களே இரத்த தானம் செய்கிறார்கள்.


எனவே உயிர்களைக் காப்பாற்றுவதில் ரத்த தானம் மிகவும் முக்கியமானது என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நின்று அரசு மருத்துவமனைக்கு வந்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் விவேக் பாஸ்கர் தலைமை தாங்கினார். இறுதியாக ரத்ததானம் செய்வோம் என அறக்கட்டளையை சேர்ந்த உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துகொண்டனர். மேலும் சிலர் ரத்ததானம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Tags : Trichy Government Hospital ,
× RELATED வயலூர் சாலையில் நவீன போலீஸ் சோதனை சாவடி