×

6,700 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர் காவிரி பாலத்தில் சாலைபணி துவக்கம் சமயபுரம் கோயிலில் பூச்சொரிதல் விழா மார்ச் 12ம் தேதி துவக்கம்

திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா மார்ச் 12ம் தேதி தொடங்குகிறது. அம்மன் வருகிற மார்ச் 12ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்கிறார். தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா மிக சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு வருகிற மார்ச் 12ம் தேதி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா தொடங்குகிறது. அதனையொட்டி, அன்று அதிகாலையில் விக்னேஷ்வர பூஜை, புண்ணிய வஜனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்பணம் ஆகிய பூஜைகள் நடந்த பின் காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் அம்பாளுக்கு காப்புகட்டுதலுடன் விழா தொடங்கி பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. இந்த பூச்சொரிதல் விழா வருகிற 12, 19, 26, ஏப்ரல் 2, ஆகிய 4 ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது. அதுசமயம் திருச்சி மாவட்டம் மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சமர்ப்பிப்பார்கள். தொடர்ந்து வருகிற ஏப்ரல் 18ம் தேதி சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை, கோயில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோயில் அலுவலர்கள் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Cauvery Bridge ,Samayapuram Temple ,
× RELATED காரில் கட்டுக்கட்டாக ரூ.2.83 கோடி சிக்கியது