×

யோகா ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் வார விடுமுறையில் பணி புரிந்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும்

தஞ்சாவூர் பிப். 27: வார விடுமுறையில் பணி புரிந்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என்று தஞ்சாவூரில் நடந்த சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏஐடியூசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்கம் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநில நிர்வாகக் குழு கூட்டம் தஞ்சாவூர் தொழிற்சங்க அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாநில தலைவர் சாமிகண்ணு, நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.


மாநில பொதுச் செயலாளர் சந்திரகுமார் நடைபெற்ற பணிகள் மற்றும் சென்னையில் நடைபெற்ற அனைத்து சங்க கூட்டு நடவடிக்கை குழு கூட்ட முடிவுகள் பற்றி விளக்கி பேசினார். பின்னர் கூட்டத்தில் நெல் கொள்முதலில் நடைபெறுகின்ற ஊழல் முறைகேடுகளை களைய, மேலிருந்து நடவடிக்கையை தொடங்க வேண்டும்.கண்மூடித்தனமான எடை இழப்புத் தொகையை வசூலிப்பது, ஆயிரக்கணக்கில் லாரி மாமூல் ஆகியவை நடைபெறுகிறது. தற்போது கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கில் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும். ஈரப்பத தளர்வு கோரி தமிழ் நாடு அரசு ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி, காலதாமதம் செய்து அறிவிக்கப்பட்ட ஈரப்பதம் தளர்வு எந்தவிதத்திலும் விவசாயிகளுக்கு பலனளிக்காது. இனிவரும் காலங்களில் முன்கூட்டியே அறிவிப்பு செய்ய வேண்டும்.

சுமை தூக்கும் தொழிலாளர் மற்றும் கொள்முதல் பணியாளர்களுக்கு வார விடுமுறை அன்று பணிபுரிவதற்கு இருமடங்கு சம்பளமும், தேசிய பண்டிகை விடுமுறை நாட்களில் பணி புரிந்தால் மும்மடங்கு சம்பளமும் சட்டப்படி வழங்க வேண்டும். நுகர்பொருள் வாணிபகழகம் தனியார் மயமாக்கல் நடவடிக்கை, நிர்வாக பரிந்துரையான கருணை ஓய்வூதியம் ரூ. 4000 ம் வழங்குவது உள்ளிட்ட12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மார்ச் 9 ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பொருளாளர் கோவிந்தராஜன், இணை பொது செயலாளர் குணசேகரன், மாநில செயலாளர்கள் கிருஷ்ணன், முருகேசன், கலியபெருமாள் திருவாரூர் மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட தலைவர் கணேசன், வேலாயுதம், நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் ரவி, பேராவூரணி சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை