×

பைக் பறிமுதல் ராஜாளிப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம்

புதுக்கோட்டை, பிப்.26: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா ராஜாளிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு துணை இயக்குநர் டாக்டர்.ராம் கணேஷ் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தார். முகாமில் கொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராகவி, மருத்துவர்கள் வள்ளி  மாலா, பிருந்தாதேவி, புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி சிறப்பு மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு பொது மருத்துவம், ரத்த கொதிப்பு பரிசோதனை, நீரிழிவு நோய் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, கருவுற்ற பெண்களுக்கு பரிசோதனை, ஏலும்பு முறிவு பரிசோதனை உட்பட பல்வேறு பரிசோதனைகள் செய்தனர். இதில் ராஜாளிப் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சின்னச்சாமி உட்பட சுமார் 650 பேர் கலந்து கொண்டனர். மேலும் சர்க்கரை வியாதி ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மக்களை தேடி மருத்துவ முகாம் சார்பில் மருந்துகள் அடங்கிய 5 பெட்டகம் வழங்கப்பட்டது. இலவசமாக எக்ஸ்ரே, இசிஜி மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கபட்டது. முகாம் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் செல்வராஜ் உட்பட கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட சுகாதார பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags : Rajalipatti ,
× RELATED பாஜ மகளிர் அணி தலைவியின் கணவர் குத்திக்கொலை