×

தூத்துக்குடியில் வாழ்க்கை வழிகாட்டி கருத்தரங்கம் மாணவர்கள் திட்டமிட்டு செயல்பட்டால் இலக்கை எளிதாக அடையலாம் சப்-கலெக்டர் கவுரவ்குமார் அறிவுரை

தூத்துக்குடி, பிப்.26: மாணவர்கள் எந்தவொரு செயலையும் திட்டமிட்டு விருப்பத்துடன் செய்தால்தான் இலக்கை எளிதாக அடையமுடியும் என்று தூத்துக்குடி சப்-கலெக்டர் கவுரவ்குமார் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். தூத்துக்குடி வஉசி கல்லூரியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து விடுதிகளில் தங்கிப் பயிலும் 10, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவியர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு, தூத்துக்குடி சப்-கலெக்டர் கவுரவ்குமார் தலைமை வகித்து பேசியதாவது, மாணவர்களின் ஆளுமைப்பண்பு, பொதுஅறிவு, படைப்பாற்றலை ஊக்குவித்தல், சிந்தனைத்திறனை வளர்த்தல், தனித்திறமைகளை வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் அரசுப்பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் சிறந்து விளங்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறையில் மாணவர்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.அந்தவகையில், அரசு விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவர்கள், கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தங்களுக்கான வாழ்க்கை பாதையை சரியாக தேர்வு செய்து, வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமென்ற அடிப்படையில் இந்த வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

எனவே, மாணவர்கள் தங்களுக்கான உயர்கல்வியை தேர்வு செய்தல், போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளுதல் குறித்து எழும் சந்தேகங்களை இதன்மூலமாக விரிவாக கேட்டு தெரிந்துகொள்ளும் வகையிலான சிறப்பான நிகழ்வு இதுவாகும்.மாணவர்கள் எந்தவொரு செயலையும் திட்டமிட்டு விருப்பத்துடன் செய்யும் பட்சத்தில் தான் இலக்கை எளிதாக அடைய முடியும். எனவே, தங்களுக்கு விருப்பமான கல்வித்தொகுப்பை முதலில் தேர்வுசெய்து கல்வித்தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். மேலும், அரசின் சார்பில் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதற்கு ஏற்றார்போல் தங்களது தனித்திறமைகளையும் வளர்த்து கொள்ளவேண்டும் என்றார்.

அதனைத்தொடர்ந்து, அவர் விடுதி மாணவ, மாணவியர்களுக்கான மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். இதில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் விக்னேஸ்வரன், அரசு மருத்துவக்கல்லூரி மூத்த உதவி மருத்துவர் சூர்யபிரதிபா, மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் பேச்சியம்மாள், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் சொர்ணலதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சையது முகம்மது, பேராசிரியர்கள், விடுதி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Gaurav Kumar ,
× RELATED தூத்துக்குடியில் திருமணமான 6...