×

கோவில்பட்டியில் பரிதாபம் சாலையை கடக்க முயன்ற பெண் கார் மோதி பலி


கோவில்பட்டி, பிப்.26: கோவில்பட்டியில் சாலையை கடக்க முயன்ற பெண், கார் மோதி பலியானார். கோவில்பட்டி லாயல் மில் காலனியைச் சேர்ந்த விவேகானந்தன் மனைவி கிருஷ்ணபிரியா (34). மதுரை சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் சீனியர் அசிஸ்டென்டாக வேலை பார்த்தார். இவர், தினமும் கோவில்பட்டி புது பஸ்நிலையத்திலிருந்து மதுரைக்கு வேலைக்கு சென்று வருவது வழக்கம். நேற்று காலை வேலைக்கு சென்ற அவர், இரவு 7 மணி அளவில் கோவில்பட்டி புது பஸ்நிலையம் வந்தடைந்தார். அங்கு சாலையை கடக்க முயன்ற போது மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு அதிவேகமாக சென்ற கார், அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ண
பிரியா பரிதாபமாக இறந்தார். அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

தகவலறிந்து கோவில்பட்டி மேற்கு இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், எஸ்ஐ அரிகண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணபிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, காரை ஓட்டி வந்த குமரி மாவட்டம் நாகர்கோவில் அன்னை தெரசா நகரைச் சேர்ந்த அருணாசலம் மகன் சாத்துராஜ் (29) என்பவரை கைது செய்தனர். கார் மோதி இளம்பெண் பலியான சம்பவம், கோவில்பட்டி லாயல் மில் காலனியை சோகத்தில் ஏற்படுத்தியது.

Tags : Parithapam ,Kovilpatti ,
× RELATED கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை