×

சிறுமலை புதூரில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை

திண்டுக்கல், பிப். 26: திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை புதூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறக்கப்பட்டது. திண்டுக்கல் ஒன்றியம் சிறுமலைபுதூரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மலைப்பகுதியில் அமைந்துள்ள இப்பள்ளியில் மாணவர்களிடையே கற்றல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஸ்மார்ட் வகுப்பறையை அமைக்க திட்டமிடப்பட்டது. இப்பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்போடு ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்ட நிலையில் அதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) வளர்மதி தலைமையேற்று ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை திலகவதி, வட்டாரக் கல்வி அலுவலர்கள் விஜயா, மகேஸ்வரி, ஆசிரியர்கள் சாலமோன் ஜோசப், டெய்சி பிலோமினாள் மேரி, பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர் அபிநயா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : Sirumalai Putur ,
× RELATED துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில்...