×

அன்னை தெரசா பல்கலை.யில் சட்ட விழிப்புணர்வு முகாம்

கொடைக்கானல், பிப். 26: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுப்படி கொடைக்கானல் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு கொடைக்கானல் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவரும், கொடைக்கானல் நீதிபதியுமான கார்த்திக் தலைமை தாங்கினார். பல்கலைகழக வேந்தர் டாக்டர் கலா, பதிவாளர் ஷீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சமுதாயத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றியும், அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பமு குறித்தும், பெண்களுக்கான சட்டம், குடும்ப வன்முறை சட்டம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீதிபதி கார்த்திக் பேசினார். மேலும் வழக்கறிஞர்கள் பரிமளம், ஏஞ்சல், கவுசல்யா, பிரியா ஆகியோரும் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்து பேசினர். முகாமிற்கான ஏற்பாடுகளை பல்கலை. உடற்கல்வித்துறை பேராசிரியர் ராஜம் செய்திருந்தார். இதில் மாணவிகள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Legal Awareness Camp ,Mother Teresa University ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை