×

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்

திருப்பூர், பிப்.26: தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு முதலமைச்சரும், கழக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளான மார்ச் 1ம் தேதியை ‘இளைஞர் எழுச்சி நாளாய்’ திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி கழகங்கள் சார்பில் கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும், ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில், நலத்திட்ட உதவிகள் செய்தும், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், பார்வையற்றோர் இல்லங்கள், மாணவர் விடுதிகள்,கருணை இல்லங்கள்,பெண்கள் காப்பகங்கள்,மனநலகாப்பகம் போன்ற இடங்களில் வாழ்கின்றவர்களுக்கு காலை, மதியம்,இரவு உணவுகள் வழங்கியும், மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணி-புரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு,உடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், இலவச கண் மருத்-துவ முகாம், ரத்ததான முகாம்கள் நடத்தியும் மார்ச் மாதம் முழுவதும் கபடி போட்டி,கிரிக்கெட் போட்டி போன்று பல்வேறு விளையாட்டுப் போட்டிகளையும் சிறப்பாக நடத்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். இந்நிகழ்ச்சிகளில் கழக நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், கழக துணை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,M. K. Stalin ,
× RELATED ரயிலில் கேட்பாரற்று கிடந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல்