கோவை, பிப். 26: கோவை மாவட்ட திமுக செயலாளர்கள் நா.கார்த்திக் (மாநகர்), தளபதி முருகேசன் (கோவை தெற்கு), தொண்டாமுத்தூர் ரவி (கோவை வடக்கு) ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கோவை மாவட்ட ஒருங்கிணைந்த திமுக செயற்குழு கூட்டம் கோவை காளப்பட்டி சாலை சுகுணா மினி ஹாலில் வருகிற 28-ம்தேதி (செவ்வாய்) காலை 10 மணிக்கு நடக்கிறது. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்குகிறார்.
இக்கூட்டத்தில், வருகிற மார்ச் 1ம் தேதி முதல்வர் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது பற்றி விவாதிக்கப்படுகிறது. எனவே, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக்கழக, ஒன்றியக்கழக, நகர கழக, பேரூர் கழக செயலாளர்கள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.