×

காட்டேரி அணையில் ஆகாய தாமரை அகற்றும் பணி மும்முரம்

ஊட்டி, பிப். 26: காட்டேரி அணையை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகளை மிதவை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊட்டி அருகே காடடேரி பகுதியில் அணை ஒன்று உள்ளது. இந்த அணை அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அணையில் இருந்து வெடிமருந்து தொழிற்சாலைக்கு தேவையான தண்ணீர் கொண்டுச் செல்லப்படுகிறது. இந்த அணையின் பராமரிப்பு பணிகளை வெடிமருந்து தொழிற்சாலை நிர்வாகமே மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இந்த அணையின் இரு புறங்களிலும் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ள நிலையில், இந்த அணையில் சேறும் சகதியும் நிறைந்து காணப்படுகிறது. அதேபோல், இந்த அணையில் தற்போது ஆகாய தாமரை ஆக்கிரமித்துள்ளது. அணை முழுவதும் ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ள நிலையில், தண்ணீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த அணையில் உள்ள ஆகாயதாமரையை அகற்றும் பணிகள் தற்போது துவக்கப்பட்டது.

இதற்காக மிதவை ஜேசிபி இயந்திரம் ஒன்று வரவழைக்கப்பட்டு அந்த அணையில் உள்ள ஆகாய தாமை செடிகள் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. அணையில் சேறும் சகதியும் நிறைந்துள்ள நிலையில், ஆகாய தாமரை செடிகள் அகற்றும் பணிகள் சவாலாக உள்ளது.

Tags : Kateri Dam ,
× RELATED ஓவேலி பேரூராட்சி கவுன்சிலருக்கு ஒரு நாள் காவல்..!!