×

மயிலம் பொம்மபுர ஆதீன மட மேலாளருக்கு கொலை மிரட்டல்

காலாப்பட்டு, பிப். 25: புதுச்சேரி அருகே உள்ள தமிழக பகுதியான பொம்மையார்பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கல்லூரி செல்லும் வழியில் மயிலம் பொம்மபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு பின்பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலங்களும் உள்ளது. இந்த நிலத்தின் உரிமையாளர்கள் விவசாயம் செய்ய பொம்மபுர ஆதீனத்துக்கு சொந்தமான நிலத்தின் வழியாக சென்று பயன்படுத்தி வந்தனர். இதற்கு பொம்மபுர ஆதீனம் நிர்வாகமும் அவர்களது பயன்பாட்டிற்கு அனுமதித்தது. இந்நிலையத்தில் கடந்த 15ம் தேதி மடத்திற்கு சொந்தமான இடத்தில் பொம்மையார் பாளையத்தை சேர்ந்த ஜெயராமன் மற்றும் காத்தவராயன் ஆகியோர் புது வழி அமைத்து அதனை வணிக நோக்கத்திற்காக செப்பனிட்டனர்.

இதனை பொம்மபுர ஆதீனத்தின் மேலாளர் சந்தானம் தட்டிக்கேட்டபோது ஜெயராமன் மற்றும் காத்தவராயன் ஆகிய இருவரும் மேலாளரை தகாத வார்த்தையால் திட்டி அவரை தாக்க முயன்று கொலைமிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ஆதீன ேமலாளர் கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ராபின்சன் வழக்கு பதிவு செய்து ஜெயராமனை கைது செய்து ஜாமீனில் விடுவித்தார். ஆனால் காத்தவராயன் காவல் நிலையத்தில் ஆஜராகாமல் இருந்து வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா காத்தவராயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். மேலும் திருச்சி கண்டோன்மண்ட் காவல் நிலையத்தில் காலை 10 மணி மற்றும் மாலை 5 மணிக்கு தினமும் 30 நாட்களுக்கு கையெழுத்திட வேண்டுமென்ற உத்தரவினை பிறப்பித்தார்.

Tags : Maylam Pommapura ,Atheena Mutt ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை