×

பேட்டியின்போது, துணை தலைவர் பெரியசாமி, தங்கவேல், கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். ராமகிருஷ்ணா கல்லூரி சாம்பியன்

கோவை: கோவையில்  மாவட்ட அளவிலான மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டி நடந்தது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், பீளமேட்டில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நிர்மலா மகளிர் கல்லூரி அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. யாழினி 56 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் குவித்தார். சந்தியா 56 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்தார்.


182 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நிர்மலா மகளிர் கல்லூரி அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.  ஸ்ரீ ராமகிருஷ்ணா மாணவி ஆல்பெர்டின் கிரனாப் 4 ஓவர்கள் வீசி 10 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மாணவி யாழினி  சிறந்த வீராங்கனையாக அறிவிக்கப்பட்டார்.  அணியினரை, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி பாராட்டினார். கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், உடற்கல்வி இயக்குநர் வடிவேலு, சுதா வாழ்த்தினர்.

Tags : Vice President ,Periyasamy ,Thangavel ,Kandasamy ,Ramakrishna College ,
× RELATED கோயம்பேடு பூ மார்க்கெட் நாளை இயங்கும்