×

தா.பழூர் காவல்துறையினர் சார்பில் போதை மருந்து பயன்பாடு கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்

தா.பழூர்:அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா அறிவுறுத்தலின் பேரில், ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா சோமசுந்தரம் வழிகாட்டுதல் படி,
தா.பழுர் காவல் நிலைய ஆய்வாளர் கதிரவன் தலைமையில் போதை மருந்து பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் சிலால் கிராமத்தில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கூடும் இடமான சிலால் கடைவீதியில் போதைப் பொருட்கள் பயன்படுத்த கூடாது. போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் கடத்தல் மிகப்பெரிய குற்றம். குற்ற செயல் செய்வது குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக தயக்கம் இன்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறினார்.நிகழ்ச்சியில் தா.பழூர் காவல்நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் பெபின் செல்வ பிரிட்டோ , காவல் உதவி ஆய்வாளர் ராஜா, வேல்முருகன், நிக்கோலஸ், முதல் நிலை காவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு போதை மருந்து பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு குறித்தும் பிரசாரம் செய்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சிலால் கிராமத்தில் 2 இடங்களில் நடைபெற்றது.


Tags : Tha.Papur ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 3 மாட்டுவண்டிகள் பறிமுதல்