×

பழநி வனப்பகுதியில் 25 கிமீ தீத்தடுப்பு கோடு

பழநி, பிப். 25: பழநி வனச்சரகம் 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இங்கு சிறுத்தை, யானை, மான், கேளையாடு போன்ற விலங்குகளும், விலை உயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைகளும் அதிகளவு உள்ளன. தற்போது கொளுத்தும் வெயிலின் காரணமாக மரங்கள் காய்ந்து சருகுகள் அதிகளவு குவிந்துள்ளன. இந்த சருகுகளில் தீப்பற்றி காட்டுத்தீ ஏற்படும் அபாயம் நிலவி வந்தது. இந்நிலையில் பழநி வனத்துறையினர் கொடைக்கானல் சாலையில் பைக் ரோந்து பணி மேற்கொண்டனர்.

வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகளிடம் சிகரெட் போன்ற தீ விபத்திற்கு காரணமான பொருட்களை பயன்படுத்தக்கூடாதென வலியுறுத்தினர். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடுகளை தவிர்ப்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், வனப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் வனத்துறையினர் கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து புளியம்பட்டி, குதிரையாறு, பாலாறு வனப்பகுதிகளில் சுமார் 25 கிமீ தூரத்திற்கு தீத்தடுப்புக்கோடு அமைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Palani Forest ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை