×

அயநல்லூர் ஊராட்சியில் நடுநிலைப்பள்ளி கட்டிடம் கட்ட அடிக்கல்: ஒன்றிய செயலாளர் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி: அயநல்லூர் ஊராட்சியில் ரூ 56 லட்சத்தில் நடுநிலைப்பள்ளி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கும்மிடிப்பூண்டி அடுத்த அயநல்லூர் ஊராட்சியில் 1000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசிக்கின்றனர்.  இங்குள்ள கிராமபுற மக்கள் அதே பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளியில் 100க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மழைக் காலங்களில் போதிய இடம் இல்லாததால், அங்கன்வாடி மற்றும் பழைய கிராம உதவியாளர் அலுவலகங்களில் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இதை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் லலிதா கல்விச்செல்வம் அரசுக்கு பள்ளி கட்டிடம் கட்ட கோரிக்கை வைத்தார்.

இதனைதொடர்ந்து, பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் அயநல்லூர் ஊராட்சியில் இரண்டு வகுப்பறை கொண்ட அரசு பள்ளி கட்டிடம் கட்ட ரூ56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. பின்னர், அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் கி.வே.ஆனந்தகுமார், தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் மணிமேகலை, பொதுகுழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜோதி, அரிபாபு, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் முத்துக்குமார்,

தலைமை ஆசிரியர் லதா, திமுக நிர்வாகிகள் பழனி, நாகலிங்கம், வெங்கடேசன், மணி, தக்ஷிணாமூர்த்தி, ஊராட்சி செயலர் அரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாவட்ட ஊராட்சி குழு தலைவி உமா மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர் ஆனந்தகுமார் அரசு நடுநிலைப்பள்ளி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார்.

Tags : Ayanallur ,Union ,
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...