×

லாரி மோதி வாலிபர் பலி டிரைவர் கைது

பூந்தமல்லி: திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கத்தை சேர்ந்தவர் ரமேஷ் (37). இவர், பொக்லைன்  இயந்திரத்தை  வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். நேற்று தொழில் தொடர்பாக வெளியே சென்று விட்டு  அயனம்பாக்கத்திற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். மதுரவாயல் அடுத்த வானகரம் அயனம்பாக்கம் சாலையில் சென்றபோது லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது லாரி பைக் மீது உரசியது.

இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது லாரி ஏறி இறங்கியது. படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து ரமேஷ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர்.

Tags : Lorry ,
× RELATED சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது