×

என்எஸ்எஸ் முகாம்

தேனி, பிப். 24: தேனியில் இருந்து பெரியகுளம் செல்லும் சாலையில் கைலாசபட்டியில் உள்ளது திரவியம் கலை, அறிவியல் மகளிர் கல்லூரி. இக்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில், பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியில் முதல் ஒரு வார கால சிறப்பு நாட்டு நலப்பணித் திட்ட முகாம் துவக்க விழா நடந்தது.முகாம் துவக்க விழாவிற்கு தென்கரை பேரூராட்சித் தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராதாராஜேஷ் முன்னிலை வகித்தார். இதில் கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரன், முன்னாள் ராணுவ வீரர் ஆண்டியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முகாமில் கல்லூரியின் முதன்மை செயல்அலுவலர் முத்துராமலிங்கம், கல்லூரி முதல்வர் விசுமதி ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.

Tags : NSS ,
× RELATED என்எஸ்எஸ் திட்ட முகாம்