காரைக்குடி, பிப் 24 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மேலாண்மை துறை சார்பில் கல்லூரிகளுக்கிடையேயான திறன் சார்ந்த போட்டிகள் நடந்தன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 18க்கும் மேற்பட்ட கல்லூரி அணிகள் கலந்து கொண்டனர். இதில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி தொழில் நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகள் கலந்து கொண்டு அனைத்து போட்டிகளிலும் வென்று ஒட்டுமொத்த கேடயத்தை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை அழகப்பா அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் பெத்தாலட்சுமி, பேராசிரியர்கள், நிதியாளர், அலுவலகத்தினர் பாராட்டினர்.
