×

காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்: கலெக்டர் துவக்கி வைத்தார்

காஞ்சிபுரம், பிப். 24: காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளை கலெக்டர் ஆர்த்தி துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதல்வர் விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் காஞ்சிபுரம் மாவட்ட பிரிவு சார்பில் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், பொதுப்பிரிவு பள்ளிக்கல்வி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் கபடி, சிலம்பம், ஹாக்கி, மேசை பந்தாட்டம், நீச்சல் போட்டி, கிரிக்கெட், தடகள போட்டி, டென்னிஸ், சதுரங்கம் போன்ற 43 வகையான போட்டிகள் காஞ்சிபுரம் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில், பொது பிரிவினருக்கான தடகளம், கபடி, கையுந்துபந்து உள்ளிட்ட விளையாட்டுப் போட்டி நேற்று நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ், விளையாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

Tags : Kanchipuram ,District ,Chief Minister's Cup Sports Tournament ,
× RELATED அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்